Monday, November 15, 2010

கைவிலங்கிட்டதை மறுப்பதா? முதல்வருக்கு அ.சவுந்தரராசன் மறுப்பு

சென்னை, நவம்பர் 14 :
போக்ஸ்கோன்ன் நிறுவனத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு பொது செயலாளர் கைது செய்யப்பட்டபோது கைவிலங்கிடப்படவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியதை அ.சவுந்தரராசன் மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் பின்வருமாறு:  
சிஐடியு பொதுச்செயலாளராகிய எனக்கு கைவிலங்கிடப்படவில்லை என்று சட்ட மன்றத்தில் முதலமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியையும், வியப்பையும் அளிக்கிறது. கைவிலங்கை போலீசார் மாட்டியபோது ஏற்பட்ட மனவேதனையை விட இந்த மறுப்பு அதிக மனவேதனையைத் தருகிறது.

9-10-2010 அன்று நாங்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டோம். சிறையில் இருக்கும்போதே என் மீதும் சிஐடியு மாவட்டச்செயலாளர் முத்துக்குமார் உட்பட 12 பேர் மீதும் இன்னொரு வழக்கைப் போட்டு நாங்கள் அதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்படடது. இந்த வழக்கில் மீண்டும் ரிமாண்ட் செய்வதற்காக என்று 13-10-2010 அன்று உத்திரமேரூர் நீதிமன்றத்திற்கு செல்வதற்காக நாங்கள் அழைத்து வரப்பட்டோம்.


13-10-2010 அன்று பகல் 1.30 மணிக்கு வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்த எங்களை இருவர் இருவராக நிற்க வைத்து கைகளில் விலங்கு மாட்டினார்கள். விலங்கு மாட்டுவது நீதிமன்ற வழிகாட்டலுக்கு எதிரானது என நான் கூறியபோது, எ°.பி. உத்தரவு என்று அதிகார தொனியில்  கூறித்தான் விலங்கை மாட்டினார்கள். விலங்கு மாட்டிய நிலையிலேயே வேனில் ஏற்றப்பட்டோம். வேன் சென்று கொண்டிருந்தபோது வழியில்தான் கைவிலங்கு அகற்றப்பட்டது. நீதிமன்றத்திற்குள் செல்லும்போது கைவிலங்கு இருக்கக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது.

இது தொடர்பாக சிஐடியு மாநிலக்குழு டி.ஜி.பி-க்கு புகார் செய்தது. சிறையிலிருந்தபடி நான் டி.ஜி.பி-க்கு புகார் அனுப்பியுள்ளேன். மனித உரிமை ஆணையத்திற்கும் மனு அனுப்பியுள்ளேன்.

இதுவரை என்னிடமோ, விலங்கு மாட்டப்பட்ட மற்றவர்களிடமோ யாரும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. ஆனால் முதல்வர் தீர்ப்பு வழங்கி விட்டார். இது என்ன நீதி பரிபாலனம்? சிறையிலிருந்து அழைத்து வருபவனுக்கு போட்டோ ஆதாரமெல்லாம் இருக்க முடியுமா?

இதேபோல் 40 கார்களை உடைத்தோம், நொறுக்கினோம் என்று முதல்வர் கூறுவதும் தவறான செய்தி. வன்முறை பழி போடும் முயற்சி. இதுவரை போடப்பட்ட மொத்த வழக்குகளிலும் 40 கார்கள் உடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இல்லை. ஒருவேளை இனிமேல் வழக்கு வருமோ என்ற அச்சத்தையே முதல்வரின் கூற்று உண்டாக்குகிறது. வன்முறையாளர்கள் யார் என்பதை நாடறியும். போலீசின் கூற்றையும், முதலாளிகளின் கூற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு முதல்வர் உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளார்.

முதல்வர் அவர்களை டி.கே. ரங்கராஜனும்  நானும் சந்தித்த போது, கைவிலங்கு பற்றி நாங்களும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. அவர் ஏதோ இதுபற்றி விளக்கமளித்து நாங்கள் அமைதியாக இருந்தோம் என்று கூறுவது அவரது வளமான கற்பனை. இதை அரங்கேற்ற சட்டமன்றம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வரின் கூற்று உண்மைக்குப் புறம்பான திட்டமிட்ட திசைதிருப்பும் வேலையாகும். இது வன்மையான கண்டனத்திற்குரியது. போலீசார் விலங்கிட்டதை விட, இது மேலும் மோசமான செயல் என மனவேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புற்று நோயாளிகளுக்கு வீடு தேடி சிகிச்சை

சென்னை, நவம்பர் 14 :
ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் கேன் கேர் அமைப்புக்கு ஒரு அவசர சிகிச்சை வாகனத்தை இலவசமாக வழங்கி உள்ளது. இதன் மூலம் புற்று நோய் பாதிப்புக்கு ஆளான ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கப்படும். கேன் காற்றே அமைப்பு புற்று நோயாள பாதிக்கப்படவர்களுக்காக இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும்.
சென்னை வடபழனியில் உள்ள குமரன் மருத்துவமனையில் நடைபெற்ற நிகளிசி ஒன்றில் ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் அந்த வாகனத்தை வழங்கியது. இதில் ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் அகில ஸ்ரீனிவாசன்,  தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் முதலான பலர் இதில் கலந்து கொண்டனர். 

Monday, October 11, 2010

சென்னையில் லான்சன் டொயோட்டா புதிய கிளை

சென்னை, அக்டோபர் 11 :
சென்னையில்  லான்சன் டொயோட்டா புதிய கிளை ஒன்றை புற நகர் பகுதியான நீலாங்கரையில் அந்நிறுவனம் திறந்துள்ளது.  31 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த புதிய கிளை, திருவான்மியூர், அடையாறு, மயிலாப்பூர் பகுதி வாடிக்கையாளர்களை  குறி வைத்து தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tuesday, September 28, 2010

ஆஸ்கார்-க்கு போட்டி போட போகிறது பீப்ளி லைவ்


சென்னை, செப்டம்பர்  28 , 2010 :

கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வாழ்க்கை அவ லத்தை சம கால விஷயங்கள் மீதான நையாண்டி யுடன் சொல்லும் ஹிந்தி படம் பீப்ளி லைவ். ஆமிர் கான் தயாரித்துள்ள இந்த படம், பாசாங்கு அரசியல் வாதிகள், எதையும் விற்று காசு பார்க்கும் ஊடக நிறு வனங்கள் என்று எல்லாரையும் வெளுத்து வாங்கு கிறது. முன்னணி நடிகர்கள் யாரும் இதில் கிடையாது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். படம் வெளி வந்த உடன் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பாட்டது பீப்ளி லைவ். இப்பொது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்த படம், இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான வெளி நாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட தேர்ந் தெடுக்கப்பட்டு  இருக்கிறது. ஆயிரம் படங்கள் வந்தாலும், மனித வாழ்வின் அவலங் கள் மட்டுமே உலகளாவிய அளவில் எளிதில் புரிந்து கொள்ளப்படும் என்றுதானோ என்னவோ இந்த படத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.   பீப்ளி லைவ் படம் ஆஸ் கார் விருதை வெல்ல வணிக தமிழ் தன வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. 
http://www.peeplilivethefilm.com/

Friday, September 24, 2010

போக்ஸ்கன் நிறுவனத்தில் திடீர் வேலை நிறுத்தம்

சென்னை, செப்டம்பர் 24 , 2010 :
 சென்னையில் உள்ள போக்ஸ்கன்  நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்த நிர்வாகம், வரும் ஞாயிற்றுக் கிழமை பணிபுரிய வேண்டும் என்றும், ஒரு வாரம் வரை சம்பளம் பிடிக்கப்படும் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து இன்று அங்கு ஊழியர்கள் மறுபடியும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவன ஊழியரகளுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் ஊதிய உயர்வு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் அண்மைக் காலமாக கருத்து வேறுபாடுகள் புறப்பட்ட வண்ணம் உள்ளன.

 

Monday, September 20, 2010

விஜய் தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சி 'காதல் மீட்டர்'


சென்னை, செப்டம்பர் 20 , 2010 :

நேயர்களின் பங்களிப்புடன் கூடிய பல்வேறு  நிகழ்சிகளை வெற்றிகரமாக நடத்தி வரும் விஜய் டிவி, அடுத்ததாக  காதல் மீட்டர் என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொரு வரமும் வெள்ளி, சனிக் கிழமைகளில் இரவு பத்து மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் நடிகர் சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை பிரபலங்களை (அதாவது தம்பதியரை) கேள்விகள் கேட்டு, அவர்கள் அளிக்கும் விடைகளின் அடிப்படையில் புள்ளிகள் கொடுத்து பின்னர் வெற்றி பெற்ற தம்பதிக்கு நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள இல்லப் பயன்பாட்டுப் பொருட்கள் பரிசாக அளிக்கப்படும். இது போன்ற நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கலந்து கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

சிறப்பு பொருளாதார மண்டலம் துவக்குகிறது இன்போசிஸ்.

 சென்னை, செப்டம்பர் 20 , 2010 :
இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல துறையில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. அந்நிறுவனம்,  கர்நாடக மாநிலத்தில் 24.4 ஹெக்டேர் பரப்பில்  சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தைப் போலவே முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோவும் கர்நாடகாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு நிருவனகளுக்கும் சேர்த்து மொத்தம் 11 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

பயணிக்கும்போதே பங்கு சந்தை நிலவரம்

சென்னை, செப். 19:

பங்குச் சந்தையில் இன்று நமது பங்குகளின் மதிப்பு ஏறி இருக்கிறதா, இறங்கி இருக் கிறதா? கையில் இருக்கும் பங்குகளை விற்று விடலாமா, வைத்திருக்கலாமா, எவ் வெவற்றை வாங்கலாம் என்பதெல்லாம் ஒவ்வொரு முதலீட்டாளரின் தினசரி யோசனை யாக இருக்கும். ஆனால் பங்கு சந்தை நிலவரம் தெரிய வேண்டுமானால் நீங்கள் இணைய தளத்தையோ, உங்கள் செல் பேசியில் பங்கு சந்தை நிலவரம் தரும் வசதியையோ வேண் டும். அல்லது தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கு இது சாத்தியம் இல்லாததாக இருக்கி றது. இவர்களைப் போன்றவர்களுக்காக மும்பை போன்ற பெரு நகரங்களில் எல்லோரும் பார்க்கும் இடங்களில் பங்கு சந்தை விபரங்கள் தெரியும் வகையில் செய்திருப்பார்கள். இப்போது அந்த கலாச்சாரம் தமிழகத்திலும் வந்துவிட்டது.

சென்னையின் முக்கிய மையமான அண்ணா சாலையில் (ஜெமினி சந்திப்பு) உள்ள சிக்னலில் அமைந்துள்ள ஐ.எப்.சி.ஐ. நிறுவனம், இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் சற்றே மேல் நோக்கி பார்த்தல் போதும். அந்நிறுவன வெளி சுவற்றில் பங்குகளின் விபரங்கள் தோன்றிக் கொண்டிருக்கும். இபோது பலரும் இதனை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனை அடுத்து அண்ணா சாலையிலும் ஒரு நிறுவனம் பங்கு சந்தை நிலவரங்களை electronic முறையில்   காட்சிப்படுத்தி வைத்திருக்கிறது. 

Tuesday, September 14, 2010

தமிழகம் வருகிறது ஜே.கே. டயர் தொழிற் சாலை

சென்னை, 14 ,செப்டம்பர் 2010 : 
 முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான ஜே.கே. டயர் இண்டஸ்ட்ரீஸ், தமிழகத்தில் தமிழ் நாட்டில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.  
 '' தமிழ்நாட்டில் ரூ.930 கோடி முதலீட்டில் டயர் தொழிற்சாலையை அமைக்கப்படும். புதிய  தொழிற் சாலை ஆண்டுக்கு  29 லட்சம் டயர்கலை உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்கும். புதிய தொழிற் சாலை கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் '' என்று ஜே.கே.டயர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரகுபதி சின்ஹானியா தெரிவித் திருக்கிறார். 


 புதிய தொழிற் சாலை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலத்தை இந்நிறுவனம்  ஏற்கனவே வாங்கிவிட்டது. 

ஸ்பெக்ட்ரம் விவகாரம்- ஆ.ராசாவுக்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை, 13 , 2010 : 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவிடம் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போல ஒரு நோட்டீஸ் மத்திய அரசு, சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகி யோருக்கும்  அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரைக்  கொண்ட நீதிபதிகள்  குழு இந்த உத்தரவை பிறப்பித்தது. 

இந்த விவகாரம் தொடர்பான சிபிஐ அமைப்பின் விசாரணையை கண் காணிக்க கோரி சி.பி.ஐ.எல். என்ற  தொண்டு நிறுவனத்தின்  சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் என்பவர் தொடர்ந்த  பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Friday, September 3, 2010

ஜிமெயிலில் புது வசதி!

நியூயார்க் ,செப்டம்பர் 03 , 2010 :

ஜிமெயில் என்பது கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான  ஜிமெயில் இப்போது  ' பிரியாரிட்டி இன்பாக்ஸ்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த வசதியில், மின்னஞ்சல் முகவரிதாரரின்  மின்னஞ்சல் பெட்டி (இன்பாக்ஸ்) 3 பிரிவுகளாகப் பிரிவாக பிரிக்கப்படும் . முக்கிய மின்னஞ்சல்கள்  'இம்பார்ட்டன்ட் அண்ட் அன்ரெட்'  என்ற பிரிவுக்குள் சென்று விடும். மற்ற மின்னஞ்சல்கள் மற்ற பகுதிகளுக்குள் சென்று உட்கார்ந்து கொள்ளும்.

 யாரிடமிருந்து அதிக மின்னஞ்சல்கள் வருகின்றன என்ற அடிப்படையில் இந்த பிரித்தல் நடவடிக்கை இயங்குகிறது. மேலும் +பட்டன் அதிக முக்கியத்துவமான மின்னச்சல்களையும்,-பட்டன் மூலமாக குறைந்த முக்கியத்துவம்  வாய்த்த மின்னச்சல்களையும்  குறிப்பிட்டு வேறுபடுத்திக்  காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Thursday, September 2, 2010

ஹூண்டாய் கார் விற்பனை உயர்வு!

சென்னை, செப்டம்பர் 2 :

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தில் உள்நாட்டில் கார் விற்பனையில் 17 .2  விழுக்காடு உயர்வை சந்தித்தது. அதாவது 28 ,601  கார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 24 ,401 கார்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்றது.    அதே நேரத்தில் கடந்த மாதம் 22 ,305 கார்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 12 .3  விழுக்காடு சரிவு ஆகும். 

இது குறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் அர்விந்த் சக் சேனா கூறுகையில், ''ஹூண்டாய் கார் களுக்கான உள் நாட்டுத் தேவை தொடர்ந்து அதிகரிக்கும். மூலப் பொருட்கள் கிடைப்ப தில் சில சிரமங்கள் ஏற்பட்டதால் உற்பத்தி யில் சிறிதளவு தேக்கம் ஏற்பட்டது. எனவே எமது உற்பத்தி முறையில் சில மாற்றங் களை செய்ய இருக்கிறோம். எதிர்வரும் விழாக்காலத்தில் உள்நாட்டில் ஹூண்டாய் கார்களுக்கு நல்ல கிராக்கி ஏற்படும் என்று எதிர்பார்கிறோம்'' என்றார்.

Wednesday, September 1, 2010

யோகாவை காப்பாற்ற மத்திய அரசு அதிரடி!

சென்னை, செப்டம்பர் 1 : 
இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலைகளில் ஒன் றான யோகா சனத்துக்கு இப்போது சோதனை வந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடு களில் உள்ள மக்கள் தங்கள் மன அழுத்தத் திலிருந்து விடுபடவும், உடலையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் யோகா கற்று வருகின்றனர். தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட இது தொடர் பான நூல்களை வாங்கி செல்வதை நீங்களே பார்த்திருக்க முடியும். இதை பணம் கொட்டும் தொழிலாகவும் சிலர் ஆகி விட்டார்கள். அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான யோகாசன பயிற்சி மையங் கள் செயல் பட்டு வருகின்றன. இதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. இப்போது நாங்கள்தான் யோகாசனத்தை கண்டு பிடித்தோம் என்று அவர்களில் சிலர் உரிமை கொண்டாடுவதுதான் கொடுமை. அண்மை யில் தென் கொரியா வில் யோகாசனத்தை தாம்தான் கண்டு பிடித்த தாகவும், அதற்கு  காப்புரிமை வேண்டும் என்றும் சர்வதேச காப்புரிமை அமைப்பிடம் விண்ணப்பித்திருக் கிறார்கள்.   





இந்நிலையில் மத்திய அரசு, யோகா கலையைப் பாதுகாக்கும் நோக் கத்துடன் ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதன்படி பல யோகா வல்லுனர்களி டம் பேசி, பல்வேறு யோகாசனங்களை செய்ய வைத்து, அவற்றை வீடியோ படங்களாக எடுத்து, பன்னாட்டு அறிவு சார் சொத்துரிமை அமைப்பிடம் வழங்கி இருக்கிறது. அவற்றின் மூலம் யோகாசன கலை இந்தியாவில் பன்னெடுங் காலமாக இருந்து வருகிறது என்பது மெய்ப்பிக் கப்படும். மேலும், யாரும் சொந்த சரக்கை யோகாசனத்தில் கலந்து அடித்து கல்லா   கட்டுவதுடன், காப் புரிமை கோருவதற்கும் தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்.


சில ஆண்டுகளுக்கு முன்பு , வேப்ப  மரத்தின் மருத்துவ குணங்களை தாங்கள் தான் கண்டு பிடித்ததாக அமெரிக்கா காப்புரிமை பெற்றதும், அதை எதிர்த்து போராடி இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வார் வேம்பை நமக்கு மீட்டு  தந் ததும் நினைவு கூரத்தக்கது. 

website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

8 .8 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது இந்தியப் பொருளாதாரம்

புது டில்லி, ஆகஸ்ட் 31 , 2010 :

மாண்டேக் சிங் அலுவாலியா
 உற்பத்தி துறையின் வளர்ச்சியை அடுத்து இந்தியப் பொருளாதாரம் கடந்த 3  மாதங்களில் 8 .8  விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது. வேளாண்மை துறை, 2 .8 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உற்பத்தி துறை, 12 .4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய  ஆண்டில் (இதே காலாண்டில்) இது வெறும் 3 .8 விழுக்காடு உயர்வாகத் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

      அதே போல கட்டுமானத் துறையும் 7 .5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. வங்கி, நிதி, காப்பீடு சேவை துறைகள் 8 விழுக்காடு அளவுக்கு வளர்ந்துள்ளன. இந்த ஆண்டில் (2010 -11 ) நாட்டின் பொருளாதாரம் 8 .5 அளவுக்கு உயரும் என்று மத்திய அரசு எதிர்பார்கிறது.  இதனையே திட்டக் குழுவின் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் கூறியிருக்கிறார்.




Monday, August 30, 2010

டெக் மஹிந்த்ராவில் இருந்து விலகினார் சஞ்சய் கல்ரா

சென்னை, ஆகஸ்ட், 29:
 டெக்  மகிந்திரா  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கல்ரா தற்போது அந்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஆறு ஆண்டுகள் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த கல்ராவின் இந்த விலகல் வணிக உலகின் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

சஞ்சய் கல்ரா


சத்யம் நிறுவன மோசடி வெளி வந்த நேரத்தில், குறிப்பாக அந் நிறுவனத்தை டெக் மகிந்திரா கையகப்படுத்தியபோது கல்ராவின் பங்களிப்பு மிகவும் கவனம் பெற்றது. இணைப்புக்குப் பிறகு தற்போது அவர் மஹிந்த்ராவை விட்டு விலகு வது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இவரது  விலகலை அடுத்து நிறுவனத்தின் தற்போதைய துணைத்தலைவராக இருக்கும் வினீத் நய்யார் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்கிறார். இவர்கள் இருவருமே முன்னாள் ஹெச்.சி.எல். நிறுவன ஊழியர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி.



website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

Friday, August 27, 2010

வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயருகிறது

புது டில்லி, ஆகஸ்ட், 27:

மாதச் சம்பளதார்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட இருக் கிறது. இன்றைய நிலையில்  ஆண்டுக்கு ரூ. 1.60 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வரி விலக்கு கிடைத்து வருகிறது. அதற்கு  மேல்-ரூ. 5 லட் சம் வரை வாங்கு வோருக்கு 10 விழுக்காடு  வரி விதிக்கப் படுகிறது. 5 முதல் 8 லட்சம் வரை ஊதியம்  பெறுவோ ருக்கு 20 விழுக்காடும்,  8 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோ ருக்கு 30 விழுக்காடும் வரி விதிக் கப்படுகிறது.

இது கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது:

ரூ.2 லட்சம்  - ரூ.5  லட்சம் -10%
ரூ.5 லட்சம்  - ரூ.10 லட்சம் -20%
ரூ.10 லட்சம் : 30%

மூத்த குடிமகன்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர இருக்கிறது.
இது தவிர   வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு அதாவது ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு  தொடர்ந்து நீடிக்கும். ஜிபிஎப், பிபிஎப், ஆர்பிஎப் ஆகியவற்றின் மீதான சலுகைகள் தொடர்ந்து நீடிக்கும்.இந்த முடிவுகளுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. திங்களன்று இது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.

இலவச தொலைபேசி அழைப்பு வசதி: தருகிறது கூகுள்

நியூயார்க், ஆகஸ்ட், 26 ,2010:

இணையதள நிறுவனங்களில் மிகப்பெரிய சேவை நிறுவனமான கூகுள், தனது  ஜிமெயில் வாயிலாக தொலைபேசி சேவையை துவக்கி உள்ளது. கூகிளின்  இந்த சேவையை பெற விரும்புவோர், தங்களது  ஜிமெயில் கணக்கிற்குள் செல்ல வேண்டும். அங்கு இடப்புறத்தில் உள்ள  'கால்'  அல்லது ' சாட்'  என்ற பிரிவிற்கு சென்று சொடுக்க வேண்டும்.  அமெரிக்கா,  கனடா நாடுகளுக்கு இலவசமாகவும், மற்ற நாடுகளுக்கு, குறைந்த கட்டணத்திலும் தொலைபேசி அழைப்புகளை இந்த சேவை மூலம் செய்ய முடியும். அதே போல அரட்டை பிரியர்கள் வீடியோ சாட் செய்யவும் இந்த சேவை உதவும். 

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய வங்கி வந்தாச்சு!



மும்பை, ஆகஸ்ட் 27:


நாட்டிலேயே முதன் முறையாக ஆஸ்த்ரேலியா நாட்டு  வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் பேங்க் ஆப் ஆஸ்தி‌ரேலியா என்ற பெயரில் இது துவக்கப்பட்டிருக்கிறது.  இது இந்தியாவில் துவங்கப்பட்டுள்ள முதல் ஆஸ்திரேலிய வங்கி ஆகும். இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயே, இந்தியாவில் ‌வர்த்தக செயல்பாட்டினை துவங்க முடிவு எடுத்ததாகவும் அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.

Wednesday, August 25, 2010

இந்தியாவில் கீழ் நடுத்தர குடும்பங்கள்தான் அதிகம்-ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு முடிவு

புது டில்லி, ஆகஸ்ட் 25 :

ஆசியாவில் மத்திய தர வர்க்க குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவிதுள்ள்ளது. அடுத்த  20 ஆண்டுகளில் அமெரிக்க , ஐரோப்பிய மதிய தர வர்க்க குடும்பங்களின்  இடத்தை  ஆசியர்கள் பிடித்து விடுவார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது. அவ்வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :


 இந்தியாவில் 82  விழுக்காடு நடுத்தர வர்க்க குடும்பங்களின்  . 1000 முதல் ரூ. 2000 வரை இருக்கிறது. . அதேசமயத்தில் , ரூ. 10,000 மேல் வருமானம் பெறுபவர்  செல்வந்தர் என்று அழைக்கப் பெறுகிறார்கள்.  மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை ஊதியம் ஈட்டுபவர்களை கீழ் நடுத்தர வர்க்கம்  என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்ப வர்களை நடுத்தர மத்திய வர்க்கம் என்றும், ரூ. 5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை உயர் நடுத்தர வர்க்கம்  என்றும் அதில் வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஆக,  ரூ. 10,354 சம்பாதிப்பவர்கள் செல்வந்தர்கள் என்று ஒரு புதிய வரைவிலக்கணத்தை ஆசிய வளர்ச்சி வங்கி கொடுத்திருக்கிறது.   நம் நாட்டில்  82 விழுக்காடு பேர் (22.40 கோடி பேர்) கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்கிறது அந்த ஆய்வு.

Monday, August 23, 2010

புதுக்கோட்டையில் பாரத மிகு மின் நிறுவனத்தின் புதிய பிரிவு


புது டில்லி, 23 
 பாரத மிகு மின் நிறுவனம் (பி.எச். எ.எல்), புதுக்கோட்டை  புதிய உற்பத்தி பிரிவுகளை தொடங்க இருக்கிறது. இந்த தகவலை  மத்திய கனரக தொழிற்சாலை துறை அமைச்சர் அருண் யாதவ், நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள விவரம்:
'' புதுக்கோட்டையில் புதுடில்லி யூனிட்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், புதுக்கோட்டையில் ரூ. 293 கோடி மதிப்பீட்டில்  ஒரு உற்பதிப்பிரிவு அமைக்கப்பட உள்ளது. இது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, August 22, 2010

சிறுதொழில் முனைவோருக்கு உதவ கால் சென்டர்

புது டெல்லி, ஆகஸ்ட், 22 :
புதிய சிறு தொழில் முனைவோரை ஊக்குவிப்போருக்காக 'உதயமி ஹெல்ப் லைன் ' என்ற பெயரில் அழைப்பு மையத்தை (கால் சென்டர்)  குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் துவக்கியுள்ளது. இந்த மையத்தை புது டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்க் திறந்து வைத்தார். சிறு தொழில் முனைவோர் இந்த மையத்தின் 1800 -180 -6763 என்ற என்னை தொடர்பு கொண்டு தொழில் தொடங்குவது தொடர்பான ஐயங்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் விடைகளை பெறலாம். ஆண்டு முழுவதும் காலை பத்து மணி முதல் இரவு பத்து மணிவரை இந்த சேவை செயல்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சேவை ஆற்றும் அரசு அமைப்புகளின் மீதான் புகார்களையும் இந்த என்னில் தொடர்பு கொண்டு கூறலாம் என்று அரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 21, 2010

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கொடுத்த டிசிஎஸ்

சென்னை, ஆகஸ்ட், 21:

நாட்டிலேயே அதிக அளவாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கிய நிறுவனம் என்ற பெயரை   டாடா கன்சல்டன்சி (டிசிஎஸ்) நிறுவனம்   பெற்றிருக்கிறது.   அந்நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 63 ஆயிரத்து 700 பணியாளர்கள்  பனி புரிவது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக பேருக்கு வேலை வைப்பு கொடுத்த விசயத்தில் இரண்டாவது இடத்தில் ஐ.பி.எம். நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். சர்வதேச அளவில்  ஐபிஎம் நிறுவன அலுவலகங்களில் பணி புரிவோரின்  எண்ணிக்கை 4 லட்ச மாகும். இன்போசிஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 14ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில்  ஐபிஎம்தான் முன்னணியில் உள்ளது. தனது அலுவலக பரப்பளவையும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது  10 லட்சம் சதுர அடிக்கு அலுவலகத்தை விஸ்தரித்துள்ள ஐபிஎம்,  3 ஆண்டுகளில், புனே, பெங்க ளூரு ஹைதராபாத் நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத்  தெரிய வந்துள்ளது.

Friday, August 20, 2010

5000 தொலைகாட்சி, 2000 வானொலி அலைவரிசைகள் ஒரே சாதனத்தில்!

சென்னை, ஆகஸ்டு 19, 2010:  டெக்ஸோனிக் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனம், இன்று புது வகையான மல்டிமீடியா ப்ளக் அண்ட் ப்ளே சாதனமான IRadioPOP-I -ஐ இந்தியாவில் முதன்முதலாக அறிமுகம் செய்கிறது.  இதன் வரவினால், உலகம் முழுவதுமுள்ள 20000 இணைய வழி வானொலி நிலையங்கள் மற்றும் 5000 இணையவழி தொலைக்காட்சி அலைவரிசைகளை  கேட்டும் கண்டும் மகிழலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய வானொலி நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் நாடு, வகை மற்றும் மொழிவாரியாக வகைப்பிரிக்கப்படுகின்றன. இந்த சாதனத்தை ஏதேனும் தனிநபர் கணினி  அல்லது மடிக்கணினியில்  இணையத்தில் இணைக்கப்பட்டவுடன், உங்களுக்கு  விருப்பமான வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை மெனுப் பட்டியலில் இருந்து  தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

“இச்சாதனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கப் பெறுவதை உறுதி  செய்வதற்கு நாங்கள் நாட்டில் முன்னணியிலுள்ள சில சில்லறை வணிகர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுடன் கைகோர்க்க உள்ளோம். வாடிக்கையாளர்கள் தங்க ளுக்கு விருப்பமான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் வானொலி நிலையங் களையும் தங்கள் வசதிக்கேற்ப, பயணம் செய்துகொண்டிருக்கும் வேளை யிலும் கூட, கண்டும் கேட்டும் மகிழ முடியும். தற்சமயம் இந்த சாதனம் சென்னை, பெங்களூரு  , ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கிறது. இதன்  விலை ரூ.1500   ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது", என்று டெக்ஸோனிக் இன்ஸ்ட்ரு மெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் நிதேஷ் பண்டாரி  கூறுகிறார்.

“இந்தியாவைப் போன்று மிக வேகமான விரிவடைந்து வரும் இணையச் சந்தை ஒன்றில், இணையத்தைப் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் அதிகரித்து வருகிறது உத்தேச மதிப்பீட்டின்படி, இந்தியாவில் தோராயமாக 81 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்து கின்றனர்.  இச்சாதனத்தை செருகிய  உடனேயே, இதில் கொடுக்கப்பட்டுள்ள மெனுப் பட்டியலில் இருந்து உடனடியாக நிரல் களை தேர்வு செய்துகொள்ள முடியும். இதற்கு பதிவு அல்லது கடவுச் சொல்லோ  அல்லது எந்த வகையான மாதாந்திர கட்டணங்களோ தேவைப்படாது. ” என்றும் திரு. நிதேஷ்  பண்டாரி அவர்கள் கூறுகிறார்.

புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் சொத்து எவ்வளவு?

சென்னை, ஆகஸ்ட் 20 : அண்டை மாநிலமான புதுச்சேரி  முதல்வர் வைத்திலிங்கம் தனது சொத்து கணக்கை  வெளியிட்டிருக்கிறார். அதன்படி  வங்கியில் அவரது பெயரில் ரூ.11 லட்சத்து 85,535. மனைவி  பெயரில் ரூ.17.89 லட்சம்  , புதுவை ஸ்பின்னர்ஸ், ஆந்திரா வங்கி, ரிலையன்ஸ், இந்தியன் வங்கி உள்ளிட்டவற்றில் பங்கு பத்திரங்கள் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.  மேலும், எல்ஐசி காப்பீடு ,  விவசாய நிலங்கள், வீடு, டிராக்டர்,இண்டிகா கார், 900 கிராம் தங்க நகைகள் இருப்பதாக மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள தகவலில்  குறிப்பிட்டுள்ளார்.

Thursday, August 19, 2010

பி.பீ.ஓ. நிறுவனங்கள் தொடங்க தமிழக அரசு மானியம்

சென்னை, ஆகஸ்ட்  19: ஊரகப் பகுதிகளில் புறங்களில் பி.பீ.ஓ. நிறுவனங்களை  தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு மானியம் அளிக்க  உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமப்புற பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கான தனி  கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குறைந்த பட்சம்  100 ஊழியர்களுடன் 3 ஆண்டுகள் செயல்பட்டு வரும்  . நிறுவனங்களுக்கு 15 விழுக்காடு வரை மானியம்  தரப்படும்.  அதேபோல,  100 பேருக்கு 3 மாத  பி.பீ.ஓ.பயிற்சியும், பின்னர்   9 மாதங்கள் வேலை வாய்ப்பு  வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும்.  பயிற்சி பெறுவோருக்கு மாதந்திர உதவி தொகையும் உண்டு.

வட்டி வீதம் உயர்ந்தது. வீட்டுக்கடன்கள் வட்டியும் உயரும்.




மும்பை, ஆகஸ்ட்  17 : 

  நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  உட்பட பல வங்கி கள் தங்களது  வட்டி விகி தங்களை மாற்றி  உள்ளன.  அதன்படி நுகர்வோர் கடன் கள், வீட்டுக்கடன்கள் ஆகியவற்றுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்க இருக்கின்றன. அதேபோல வைப்புகளுக்கான வட்டி வீதமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட்ட  வட்டி வீதங்கள்  இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்த கடன் கொள்கையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதகாக வங்கிகளுக்கான ரெப்போ ,  ரிவர்ஸ்  ரெப்போ விகிதங் களை மாற்றியமைத்து. இதனை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா , பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற முன்னணி வங்கிகள் தங்களது கடன் வட்டி வீதங்களை உயர்த்தி இருக்கின் றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடனுக்கான வட்டி வீதத்தை அரை விழுக்காடு அதி கரித்திருக்கிறது.

புதிய வட்டிவீதம் நடைமுறைக்கு வருவதால் சொந்த வீட்டு கனவில் இருப் போருக்கு இது கொஞ்சம் கூடுதல் சுமையாகத்தான்  இருக்கும் என்று தோன்றுகிறது.

சமூக தொழில் கல்லூரி-டிவிஎஸ் தொடக்கம்


சென்னை, ஆகஸ்ட் 17, 2010:
டிவிஎஸ் கல்வி சமூகம் (டிவிஎஸ்இஎஸ்), 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இப்போது மிகச் சிறந்த பள்ளிக்கூடம், பாலிடெக்னிக், கிராமப்புற பயிற்சி வகுப்புகளை தமிழகம், கர்நாடக மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இப்போது டிவிஎஸ்இஎஸ் அமைப்பானது டிவிஎஸ் தொழில் கல்லூரியை (டிவிஎஸ்-விசி) மிகப்பெரிய அளவில் வானகரத்தில் உள்ள டிஎஸ் ஸ்ரீனிவாசன் பாலிடெக்னிக் மற்றும் உயர் பயிற்சி மையத்தில் அமைத்துள்ளது.

டிவிஎஸ்-விசி மையமானது முறையான கல்வியை பெறாதவர்களுக்கும் உதவும். டிவிஎஸ்-விசி கல்வித் திட்டமானது குறிப்பிட்ட துறையில் திறன் மிக்கவர்களை உருவாக்குவதாகும். தொழில் திறன் பெற்றவர்களுக்கு சான்று அளித்து உருவாக்குவதன் மூலம் அவர்களது பொருளாதார நிலை உயரும். மேலும் சமூகத்தில் அந்தஸ்தும் கிடைக்கும்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 85% பேருக்கு இக்கல்லூரியில் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெற விரும்புவோருக்கு அத்துறையில் பயிற்சி பெறுவதற்கான வசதியையும் டிவிஎஸ்-விசி அளிக்கிறது. இத்தகைய பயிற்சி அளிப்பதற்காக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

“திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு பயிற்சித் திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பல லட்சக் கணக்கான இளைஞர்களில் வெகு சிலரே சிறந்த வேலையைப் பெறுகின்றனர். கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் நான்கில் ஒருவர்தான் வேலைக்கான திறமையுடன் திகழ்கின்றனர். இதனால்தான் மாணவர்களை தொழில் நிறுவனங்கள் முதல் நாளிலிருந்தே தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றன. மேலும் அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்தால், திறமையை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் இதுபோன்ற திறன் மேம்பாட்டுபயிற்சிகள் இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு மிகுந்த உதவியாக இருப்பதோடு, இதுபோன்ற தகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் வேலை பெறுவதற்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது,” என்று டிவிஎஸ்எஸ்இஎஸ் இயக்குநர் டாக்டர் மாலினி ஸ்ரீனிவாசன் கூறினார்.


“இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் தொழில் கல்வியைப் பெறுவதற்கு எந்த ஒரு தொழில் கல்லூரியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு இந்திரா காந்திதேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம் ஆர்வமாக உள்ளது. டிவிஎஸ்இஸ் மையம், தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்த்தமுள்ள ஒப்பந்தமாக டிவிஎஸ் தொழில் கல்லூரியுடனான ஒப்பந்தம் அமையும்,” என்று இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் கே. பன்னீர்செல்வம் கூறினார்

தொழில்நுட்ப பயிற்சி படிப்பு
1.    இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் சான்றிதழ்
2.    சிஎன்சி புரோகிராமிங் & மெஷினிங்கில் சான்றிதழ்
3.    பிஎல்சி புரோகிராம் சான்றிதழ்
4.    “கேட்” சான்றிதழ்
5.    டூல் வடிவமைப்பு சான்றிதழ்
6.    இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸில் சான்றிதழ்
7.     ஃபிட்டிங் சான்றிதழ்
8.    மெஷினிங் சான்றிதழ்
9.    வெல்டிங் சான்றிதழ்
10.     வீடுகளுக்கான குழாய் அமைப்பு சான்றிதழ்
11.    வீடுகளுக்கான மின்சார வயர் அமைப்பது
12.     செல்போன் ரிப்பேரில் பட்டயபடிப்பு
தொழில்நுட்பம் சாராத படிப்பு
1.    காப்பீடு குறித்த சான்றிதழ்
2.    சில்லரை வணிக சான்றிதழ்
3.    நிதி & கணக்கியல் பட்டய படிப்பு
4.    ஹோட்டல் உள்ளிட்ட உபசரிப்புத்துறை சான்றிதழ் படிப்பு
டிவிஎஸ்-விசி பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில் நுட்பம் அல்லாத திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கிறது. இதில் 6 மாத சான்றிதழ் படிப்பு முதல் ஓராண்டு பட்டயப படிப்பு வரை அடங்கும். இந்த படிப்புகளில் சேர கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தொழிலில் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். இதில் சேர்வதற்கு வயது வரம்பு கிடையாது. பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தியவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு. இதன் மூலம் அவர்கள் தங்களது திறமையை மேம்படுத்திக் கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேற முடியும்.

டிவிஎஸ்-விசி, இதுபோன்று மேலும் மூன்று மையங்களை அமைத்து விரிவு படுத்தத் திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் தென் மாநிலங்களில் அமையும். அத்துடன் தொழில்துறை பயிற்சித் திட்டங்களை நாடு முழுவதும் கற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை பல்வேறு தொழில் கல்லூரிகளுடன் செய்து கொண்டு மேலும் பல பயிற்சி வகுப்புகளைத் தொடங்கத் திட்ட மிட்டுள்ளது.

ரூபாய் குறியீட்டுடன் விசைப்பலகை: டி.வி.எஸ்.அறிமுகம்

சென்னை, 17 ஆகஸ்ட்:
தமிழகத்தின் முன்னணி கணிப்பொறி உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான டி.வி. எஸ். எலெக்ட்ரானிக்ஸ், நாட்டிலேயே முதன் முறையாக ரூபாய் சின்னத்தைக் கொண்ட கணிப்பொறி விசைப்பலகையை அறிமுகம் செய்திருக்கிறது. 490மிமீ நீளம், 180மிமீ அகலம் 20மிமீ  உயரம் கொண்ட இந்த விசைப்பலகை விண் டோஸ் மற்றும் லினக்ஸ்  இயக்கு மென்பொருள் உள்ள அனைத்து கணிப் பொறிகளிலும் எளிதாக இயங்கும். இதன் விலை ரூ. 1495 தான்.
டாலர், ஈரோ பணத்தைப் போல உருவாகப்பட்டுள்ள இந்த புதிய ரூபாய் குறியீட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் எழுத்துருவை மங்க ளூரை சேர்ந்த போரடியான் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ` குறியீட்டை தட்டச்சு செய்ய விரும்புவோர், http://blog.foradian.com/rupee-font-version-30 என்ற இணைய தளத்திற்கு  சென்று இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.