டெக் மகிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் கல்ரா தற்போது அந்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஆறு ஆண்டுகள் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த கல்ராவின் இந்த விலகல் வணிக உலகின் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.
![]() |
சஞ்சய் கல்ரா |
சத்யம் நிறுவன மோசடி வெளி வந்த நேரத்தில், குறிப்பாக அந் நிறுவனத்தை டெக் மகிந்திரா கையகப்படுத்தியபோது கல்ராவின் பங்களிப்பு மிகவும் கவனம் பெற்றது. இணைப்புக்குப் பிறகு தற்போது அவர் மஹிந்த்ராவை விட்டு விலகு வது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இவரது விலகலை அடுத்து நிறுவனத்தின் தற்போதைய துணைத்தலைவராக இருக்கும் வினீத் நய்யார் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்கிறார். இவர்கள் இருவருமே முன்னாள் ஹெச்.சி.எல். நிறுவன ஊழியர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி.
| Provided by website-hit-counters.com site. |
