புது டெல்லி, ஆகஸ்ட், 22 :
புதிய சிறு தொழில் முனைவோரை ஊக்குவிப்போருக்காக 'உதயமி ஹெல்ப் லைன் ' என்ற பெயரில் அழைப்பு மையத்தை (கால் சென்டர்) குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் துவக்கியுள்ளது. இந்த மையத்தை புது டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்க் திறந்து வைத்தார். சிறு தொழில் முனைவோர் இந்த மையத்தின் 1800 -180 -6763 என்ற என்னை தொடர்பு கொண்டு தொழில் தொடங்குவது தொடர்பான ஐயங்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் விடைகளை பெறலாம். ஆண்டு முழுவதும் காலை பத்து மணி முதல் இரவு பத்து மணிவரை இந்த சேவை செயல்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சேவை ஆற்றும் அரசு அமைப்புகளின் மீதான் புகார்களையும் இந்த என்னில் தொடர்பு கொண்டு கூறலாம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
