Tuesday, September 28, 2010

ஆஸ்கார்-க்கு போட்டி போட போகிறது பீப்ளி லைவ்


சென்னை, செப்டம்பர்  28 , 2010 :

கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வாழ்க்கை அவ லத்தை சம கால விஷயங்கள் மீதான நையாண்டி யுடன் சொல்லும் ஹிந்தி படம் பீப்ளி லைவ். ஆமிர் கான் தயாரித்துள்ள இந்த படம், பாசாங்கு அரசியல் வாதிகள், எதையும் விற்று காசு பார்க்கும் ஊடக நிறு வனங்கள் என்று எல்லாரையும் வெளுத்து வாங்கு கிறது. முன்னணி நடிகர்கள் யாரும் இதில் கிடையாது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். படம் வெளி வந்த உடன் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பாட்டது பீப்ளி லைவ். இப்பொது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்த படம், இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான வெளி நாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட தேர்ந் தெடுக்கப்பட்டு  இருக்கிறது. ஆயிரம் படங்கள் வந்தாலும், மனித வாழ்வின் அவலங் கள் மட்டுமே உலகளாவிய அளவில் எளிதில் புரிந்து கொள்ளப்படும் என்றுதானோ என்னவோ இந்த படத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.   பீப்ளி லைவ் படம் ஆஸ் கார் விருதை வெல்ல வணிக தமிழ் தன வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. 
http://www.peeplilivethefilm.com/

Friday, September 24, 2010

போக்ஸ்கன் நிறுவனத்தில் திடீர் வேலை நிறுத்தம்

சென்னை, செப்டம்பர் 24 , 2010 :
 சென்னையில் உள்ள போக்ஸ்கன்  நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்த நிர்வாகம், வரும் ஞாயிற்றுக் கிழமை பணிபுரிய வேண்டும் என்றும், ஒரு வாரம் வரை சம்பளம் பிடிக்கப்படும் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து இன்று அங்கு ஊழியர்கள் மறுபடியும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவன ஊழியரகளுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் ஊதிய உயர்வு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் அண்மைக் காலமாக கருத்து வேறுபாடுகள் புறப்பட்ட வண்ணம் உள்ளன.

 

Monday, September 20, 2010

விஜய் தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சி 'காதல் மீட்டர்'


சென்னை, செப்டம்பர் 20 , 2010 :

நேயர்களின் பங்களிப்புடன் கூடிய பல்வேறு  நிகழ்சிகளை வெற்றிகரமாக நடத்தி வரும் விஜய் டிவி, அடுத்ததாக  காதல் மீட்டர் என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொரு வரமும் வெள்ளி, சனிக் கிழமைகளில் இரவு பத்து மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் நடிகர் சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை பிரபலங்களை (அதாவது தம்பதியரை) கேள்விகள் கேட்டு, அவர்கள் அளிக்கும் விடைகளின் அடிப்படையில் புள்ளிகள் கொடுத்து பின்னர் வெற்றி பெற்ற தம்பதிக்கு நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள இல்லப் பயன்பாட்டுப் பொருட்கள் பரிசாக அளிக்கப்படும். இது போன்ற நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கலந்து கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

சிறப்பு பொருளாதார மண்டலம் துவக்குகிறது இன்போசிஸ்.

 சென்னை, செப்டம்பர் 20 , 2010 :
இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல துறையில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. அந்நிறுவனம்,  கர்நாடக மாநிலத்தில் 24.4 ஹெக்டேர் பரப்பில்  சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தைப் போலவே முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோவும் கர்நாடகாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு நிருவனகளுக்கும் சேர்த்து மொத்தம் 11 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

பயணிக்கும்போதே பங்கு சந்தை நிலவரம்

சென்னை, செப். 19:

பங்குச் சந்தையில் இன்று நமது பங்குகளின் மதிப்பு ஏறி இருக்கிறதா, இறங்கி இருக் கிறதா? கையில் இருக்கும் பங்குகளை விற்று விடலாமா, வைத்திருக்கலாமா, எவ் வெவற்றை வாங்கலாம் என்பதெல்லாம் ஒவ்வொரு முதலீட்டாளரின் தினசரி யோசனை யாக இருக்கும். ஆனால் பங்கு சந்தை நிலவரம் தெரிய வேண்டுமானால் நீங்கள் இணைய தளத்தையோ, உங்கள் செல் பேசியில் பங்கு சந்தை நிலவரம் தரும் வசதியையோ வேண் டும். அல்லது தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கு இது சாத்தியம் இல்லாததாக இருக்கி றது. இவர்களைப் போன்றவர்களுக்காக மும்பை போன்ற பெரு நகரங்களில் எல்லோரும் பார்க்கும் இடங்களில் பங்கு சந்தை விபரங்கள் தெரியும் வகையில் செய்திருப்பார்கள். இப்போது அந்த கலாச்சாரம் தமிழகத்திலும் வந்துவிட்டது.

சென்னையின் முக்கிய மையமான அண்ணா சாலையில் (ஜெமினி சந்திப்பு) உள்ள சிக்னலில் அமைந்துள்ள ஐ.எப்.சி.ஐ. நிறுவனம், இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் சற்றே மேல் நோக்கி பார்த்தல் போதும். அந்நிறுவன வெளி சுவற்றில் பங்குகளின் விபரங்கள் தோன்றிக் கொண்டிருக்கும். இபோது பலரும் இதனை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனை அடுத்து அண்ணா சாலையிலும் ஒரு நிறுவனம் பங்கு சந்தை நிலவரங்களை electronic முறையில்   காட்சிப்படுத்தி வைத்திருக்கிறது. 

Tuesday, September 14, 2010

தமிழகம் வருகிறது ஜே.கே. டயர் தொழிற் சாலை

சென்னை, 14 ,செப்டம்பர் 2010 : 
 முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான ஜே.கே. டயர் இண்டஸ்ட்ரீஸ், தமிழகத்தில் தமிழ் நாட்டில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.  
 '' தமிழ்நாட்டில் ரூ.930 கோடி முதலீட்டில் டயர் தொழிற்சாலையை அமைக்கப்படும். புதிய  தொழிற் சாலை ஆண்டுக்கு  29 லட்சம் டயர்கலை உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்கும். புதிய தொழிற் சாலை கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் '' என்று ஜே.கே.டயர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரகுபதி சின்ஹானியா தெரிவித் திருக்கிறார். 


 புதிய தொழிற் சாலை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலத்தை இந்நிறுவனம்  ஏற்கனவே வாங்கிவிட்டது. 

ஸ்பெக்ட்ரம் விவகாரம்- ஆ.ராசாவுக்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை, 13 , 2010 : 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவிடம் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போல ஒரு நோட்டீஸ் மத்திய அரசு, சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகி யோருக்கும்  அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரைக்  கொண்ட நீதிபதிகள்  குழு இந்த உத்தரவை பிறப்பித்தது. 

இந்த விவகாரம் தொடர்பான சிபிஐ அமைப்பின் விசாரணையை கண் காணிக்க கோரி சி.பி.ஐ.எல். என்ற  தொண்டு நிறுவனத்தின்  சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் என்பவர் தொடர்ந்த  பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Friday, September 3, 2010

ஜிமெயிலில் புது வசதி!

நியூயார்க் ,செப்டம்பர் 03 , 2010 :

ஜிமெயில் என்பது கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான  ஜிமெயில் இப்போது  ' பிரியாரிட்டி இன்பாக்ஸ்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த வசதியில், மின்னஞ்சல் முகவரிதாரரின்  மின்னஞ்சல் பெட்டி (இன்பாக்ஸ்) 3 பிரிவுகளாகப் பிரிவாக பிரிக்கப்படும் . முக்கிய மின்னஞ்சல்கள்  'இம்பார்ட்டன்ட் அண்ட் அன்ரெட்'  என்ற பிரிவுக்குள் சென்று விடும். மற்ற மின்னஞ்சல்கள் மற்ற பகுதிகளுக்குள் சென்று உட்கார்ந்து கொள்ளும்.

 யாரிடமிருந்து அதிக மின்னஞ்சல்கள் வருகின்றன என்ற அடிப்படையில் இந்த பிரித்தல் நடவடிக்கை இயங்குகிறது. மேலும் +பட்டன் அதிக முக்கியத்துவமான மின்னச்சல்களையும்,-பட்டன் மூலமாக குறைந்த முக்கியத்துவம்  வாய்த்த மின்னச்சல்களையும்  குறிப்பிட்டு வேறுபடுத்திக்  காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Thursday, September 2, 2010

ஹூண்டாய் கார் விற்பனை உயர்வு!

சென்னை, செப்டம்பர் 2 :

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தில் உள்நாட்டில் கார் விற்பனையில் 17 .2  விழுக்காடு உயர்வை சந்தித்தது. அதாவது 28 ,601  கார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 24 ,401 கார்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்றது.    அதே நேரத்தில் கடந்த மாதம் 22 ,305 கார்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 12 .3  விழுக்காடு சரிவு ஆகும். 

இது குறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் அர்விந்த் சக் சேனா கூறுகையில், ''ஹூண்டாய் கார் களுக்கான உள் நாட்டுத் தேவை தொடர்ந்து அதிகரிக்கும். மூலப் பொருட்கள் கிடைப்ப தில் சில சிரமங்கள் ஏற்பட்டதால் உற்பத்தி யில் சிறிதளவு தேக்கம் ஏற்பட்டது. எனவே எமது உற்பத்தி முறையில் சில மாற்றங் களை செய்ய இருக்கிறோம். எதிர்வரும் விழாக்காலத்தில் உள்நாட்டில் ஹூண்டாய் கார்களுக்கு நல்ல கிராக்கி ஏற்படும் என்று எதிர்பார்கிறோம்'' என்றார்.

Wednesday, September 1, 2010

யோகாவை காப்பாற்ற மத்திய அரசு அதிரடி!

சென்னை, செப்டம்பர் 1 : 
இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலைகளில் ஒன் றான யோகா சனத்துக்கு இப்போது சோதனை வந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடு களில் உள்ள மக்கள் தங்கள் மன அழுத்தத் திலிருந்து விடுபடவும், உடலையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் யோகா கற்று வருகின்றனர். தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட இது தொடர் பான நூல்களை வாங்கி செல்வதை நீங்களே பார்த்திருக்க முடியும். இதை பணம் கொட்டும் தொழிலாகவும் சிலர் ஆகி விட்டார்கள். அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான யோகாசன பயிற்சி மையங் கள் செயல் பட்டு வருகின்றன. இதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. இப்போது நாங்கள்தான் யோகாசனத்தை கண்டு பிடித்தோம் என்று அவர்களில் சிலர் உரிமை கொண்டாடுவதுதான் கொடுமை. அண்மை யில் தென் கொரியா வில் யோகாசனத்தை தாம்தான் கண்டு பிடித்த தாகவும், அதற்கு  காப்புரிமை வேண்டும் என்றும் சர்வதேச காப்புரிமை அமைப்பிடம் விண்ணப்பித்திருக் கிறார்கள்.   





இந்நிலையில் மத்திய அரசு, யோகா கலையைப் பாதுகாக்கும் நோக் கத்துடன் ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதன்படி பல யோகா வல்லுனர்களி டம் பேசி, பல்வேறு யோகாசனங்களை செய்ய வைத்து, அவற்றை வீடியோ படங்களாக எடுத்து, பன்னாட்டு அறிவு சார் சொத்துரிமை அமைப்பிடம் வழங்கி இருக்கிறது. அவற்றின் மூலம் யோகாசன கலை இந்தியாவில் பன்னெடுங் காலமாக இருந்து வருகிறது என்பது மெய்ப்பிக் கப்படும். மேலும், யாரும் சொந்த சரக்கை யோகாசனத்தில் கலந்து அடித்து கல்லா   கட்டுவதுடன், காப் புரிமை கோருவதற்கும் தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்.


சில ஆண்டுகளுக்கு முன்பு , வேப்ப  மரத்தின் மருத்துவ குணங்களை தாங்கள் தான் கண்டு பிடித்ததாக அமெரிக்கா காப்புரிமை பெற்றதும், அதை எதிர்த்து போராடி இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வார் வேம்பை நமக்கு மீட்டு  தந் ததும் நினைவு கூரத்தக்கது. 

website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

8 .8 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது இந்தியப் பொருளாதாரம்

புது டில்லி, ஆகஸ்ட் 31 , 2010 :

மாண்டேக் சிங் அலுவாலியா
 உற்பத்தி துறையின் வளர்ச்சியை அடுத்து இந்தியப் பொருளாதாரம் கடந்த 3  மாதங்களில் 8 .8  விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது. வேளாண்மை துறை, 2 .8 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உற்பத்தி துறை, 12 .4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய  ஆண்டில் (இதே காலாண்டில்) இது வெறும் 3 .8 விழுக்காடு உயர்வாகத் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

      அதே போல கட்டுமானத் துறையும் 7 .5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. வங்கி, நிதி, காப்பீடு சேவை துறைகள் 8 விழுக்காடு அளவுக்கு வளர்ந்துள்ளன. இந்த ஆண்டில் (2010 -11 ) நாட்டின் பொருளாதாரம் 8 .5 அளவுக்கு உயரும் என்று மத்திய அரசு எதிர்பார்கிறது.  இதனையே திட்டக் குழுவின் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் கூறியிருக்கிறார்.