
சென்னை, செப்டம்பர் 28 , 2010 :
கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வாழ்க்கை அவ லத்தை சம கால விஷயங்கள் மீதான நையாண்டி யுடன் சொல்லும் ஹிந்தி படம் பீப்ளி லைவ். ஆமிர் கான் தயாரித்துள்ள இந்த படம், பாசாங்கு அரசியல் வாதிகள், எதையும் விற்று காசு பார்க்கும் ஊடக நிறு வனங்கள் என்று எல்லாரையும் வெளுத்து வாங்கு கிறது. முன்னணி நடிகர்கள் யாரும் இதில் கிடையாது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். படம் வெளி வந்த உடன் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப் பாட்டது பீப்ளி லைவ். இப்பொது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்த படம், இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான வெளி நாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட தேர்ந் தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஆயிரம் படங்கள் வந்தாலும், மனித வாழ்வின் அவலங் கள் மட்டுமே உலகளாவிய அளவில் எளிதில் புரிந்து கொள்ளப்படும் என்றுதானோ என்னவோ இந்த படத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பீப்ளி லைவ் படம் ஆஸ் கார் விருதை வெல்ல வணிக தமிழ் தன வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
http://www.peeplilivethefilm.com/