Friday, September 24, 2010

போக்ஸ்கன் நிறுவனத்தில் திடீர் வேலை நிறுத்தம்

சென்னை, செப்டம்பர் 24 , 2010 :
 சென்னையில் உள்ள போக்ஸ்கன்  நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று திடீர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு கோரி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்த நிர்வாகம், வரும் ஞாயிற்றுக் கிழமை பணிபுரிய வேண்டும் என்றும், ஒரு வாரம் வரை சம்பளம் பிடிக்கப்படும் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து இன்று அங்கு ஊழியர்கள் மறுபடியும் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவன ஊழியரகளுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் ஊதிய உயர்வு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் அண்மைக் காலமாக கருத்து வேறுபாடுகள் புறப்பட்ட வண்ணம் உள்ளன.