Monday, September 20, 2010

விஜய் தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சி 'காதல் மீட்டர்'


சென்னை, செப்டம்பர் 20 , 2010 :

நேயர்களின் பங்களிப்புடன் கூடிய பல்வேறு  நிகழ்சிகளை வெற்றிகரமாக நடத்தி வரும் விஜய் டிவி, அடுத்ததாக  காதல் மீட்டர் என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்திருக்கிறது. ஒவ்வொரு வரமும் வெள்ளி, சனிக் கிழமைகளில் இரவு பத்து மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் நடிகர் சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை பிரபலங்களை (அதாவது தம்பதியரை) கேள்விகள் கேட்டு, அவர்கள் அளிக்கும் விடைகளின் அடிப்படையில் புள்ளிகள் கொடுத்து பின்னர் வெற்றி பெற்ற தம்பதிக்கு நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள இல்லப் பயன்பாட்டுப் பொருட்கள் பரிசாக அளிக்கப்படும். இது போன்ற நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கலந்து கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

சிறப்பு பொருளாதார மண்டலம் துவக்குகிறது இன்போசிஸ்.

 சென்னை, செப்டம்பர் 20 , 2010 :
இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல துறையில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. அந்நிறுவனம்,  கர்நாடக மாநிலத்தில் 24.4 ஹெக்டேர் பரப்பில்  சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தைப் போலவே முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோவும் கர்நாடகாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு நிருவனகளுக்கும் சேர்த்து மொத்தம் 11 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
website-hit-counters.com
Provided by website-hit-counters.com site.

பயணிக்கும்போதே பங்கு சந்தை நிலவரம்

சென்னை, செப். 19:

பங்குச் சந்தையில் இன்று நமது பங்குகளின் மதிப்பு ஏறி இருக்கிறதா, இறங்கி இருக் கிறதா? கையில் இருக்கும் பங்குகளை விற்று விடலாமா, வைத்திருக்கலாமா, எவ் வெவற்றை வாங்கலாம் என்பதெல்லாம் ஒவ்வொரு முதலீட்டாளரின் தினசரி யோசனை யாக இருக்கும். ஆனால் பங்கு சந்தை நிலவரம் தெரிய வேண்டுமானால் நீங்கள் இணைய தளத்தையோ, உங்கள் செல் பேசியில் பங்கு சந்தை நிலவரம் தரும் வசதியையோ வேண் டும். அல்லது தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கு இது சாத்தியம் இல்லாததாக இருக்கி றது. இவர்களைப் போன்றவர்களுக்காக மும்பை போன்ற பெரு நகரங்களில் எல்லோரும் பார்க்கும் இடங்களில் பங்கு சந்தை விபரங்கள் தெரியும் வகையில் செய்திருப்பார்கள். இப்போது அந்த கலாச்சாரம் தமிழகத்திலும் வந்துவிட்டது.

சென்னையின் முக்கிய மையமான அண்ணா சாலையில் (ஜெமினி சந்திப்பு) உள்ள சிக்னலில் அமைந்துள்ள ஐ.எப்.சி.ஐ. நிறுவனம், இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் சற்றே மேல் நோக்கி பார்த்தல் போதும். அந்நிறுவன வெளி சுவற்றில் பங்குகளின் விபரங்கள் தோன்றிக் கொண்டிருக்கும். இபோது பலரும் இதனை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனை அடுத்து அண்ணா சாலையிலும் ஒரு நிறுவனம் பங்கு சந்தை நிலவரங்களை electronic முறையில்   காட்சிப்படுத்தி வைத்திருக்கிறது.