Friday, August 27, 2010

வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயருகிறது

புது டில்லி, ஆகஸ்ட், 27:

மாதச் சம்பளதார்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட இருக் கிறது. இன்றைய நிலையில்  ஆண்டுக்கு ரூ. 1.60 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வரி விலக்கு கிடைத்து வருகிறது. அதற்கு  மேல்-ரூ. 5 லட் சம் வரை வாங்கு வோருக்கு 10 விழுக்காடு  வரி விதிக்கப் படுகிறது. 5 முதல் 8 லட்சம் வரை ஊதியம்  பெறுவோ ருக்கு 20 விழுக்காடும்,  8 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோ ருக்கு 30 விழுக்காடும் வரி விதிக் கப்படுகிறது.

இது கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது:

ரூ.2 லட்சம்  - ரூ.5  லட்சம் -10%
ரூ.5 லட்சம்  - ரூ.10 லட்சம் -20%
ரூ.10 லட்சம் : 30%

மூத்த குடிமகன்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர இருக்கிறது.
இது தவிர   வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு அதாவது ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு  தொடர்ந்து நீடிக்கும். ஜிபிஎப், பிபிஎப், ஆர்பிஎப் ஆகியவற்றின் மீதான சலுகைகள் தொடர்ந்து நீடிக்கும்.இந்த முடிவுகளுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. திங்களன்று இது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.

இலவச தொலைபேசி அழைப்பு வசதி: தருகிறது கூகுள்

நியூயார்க், ஆகஸ்ட், 26 ,2010:

இணையதள நிறுவனங்களில் மிகப்பெரிய சேவை நிறுவனமான கூகுள், தனது  ஜிமெயில் வாயிலாக தொலைபேசி சேவையை துவக்கி உள்ளது. கூகிளின்  இந்த சேவையை பெற விரும்புவோர், தங்களது  ஜிமெயில் கணக்கிற்குள் செல்ல வேண்டும். அங்கு இடப்புறத்தில் உள்ள  'கால்'  அல்லது ' சாட்'  என்ற பிரிவிற்கு சென்று சொடுக்க வேண்டும்.  அமெரிக்கா,  கனடா நாடுகளுக்கு இலவசமாகவும், மற்ற நாடுகளுக்கு, குறைந்த கட்டணத்திலும் தொலைபேசி அழைப்புகளை இந்த சேவை மூலம் செய்ய முடியும். அதே போல அரட்டை பிரியர்கள் வீடியோ சாட் செய்யவும் இந்த சேவை உதவும். 

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய வங்கி வந்தாச்சு!



மும்பை, ஆகஸ்ட் 27:


நாட்டிலேயே முதன் முறையாக ஆஸ்த்ரேலியா நாட்டு  வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் பேங்க் ஆப் ஆஸ்தி‌ரேலியா என்ற பெயரில் இது துவக்கப்பட்டிருக்கிறது.  இது இந்தியாவில் துவங்கப்பட்டுள்ள முதல் ஆஸ்திரேலிய வங்கி ஆகும். இந்தியா, சீனா, இலங்கை, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயே, இந்தியாவில் ‌வர்த்தக செயல்பாட்டினை துவங்க முடிவு எடுத்ததாகவும் அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.