இலவச தொலைபேசி அழைப்பு வசதி: தருகிறது கூகுள்
நியூயார்க், ஆகஸ்ட், 26 ,2010
:
இணையதள நிறுவனங்களில் மிகப்பெரிய சேவை நிறுவனமான கூகுள், தனது ஜிமெயில் வாயிலாக தொலைபேசி சேவையை துவக்கி உள்ளது. கூகிளின் இந்த சேவையை பெற விரும்புவோர், தங்களது ஜிமெயில் கணக்கிற்குள் செல்ல வேண்டும். அங்கு இடப்புறத்தில் உள்ள 'கால்' அல்லது ' சாட்' என்ற பிரிவிற்கு சென்று சொடுக்க வேண்டும். அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு இலவசமாகவும், மற்ற நாடுகளுக்கு, குறைந்த கட்டணத்திலும் தொலைபேசி அழைப்புகளை இந்த சேவை மூலம் செய்ய முடியும். அதே போல அரட்டை பிரியர்கள் வீடியோ சாட் செய்யவும் இந்த சேவை உதவும்.
No comments:
Post a Comment