புது டில்லி, ஆகஸ்ட், 27:
மாதச் சம்பளதார்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட இருக் கிறது. இன்றைய நிலையில் ஆண்டுக்கு ரூ. 1.60 லட்சம் வரை சம்பளம் வாங்குவோருக்கு வரி விலக்கு கிடைத்து வருகிறது. அதற்கு மேல்-ரூ. 5 லட் சம் வரை வாங்கு வோருக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப் படுகிறது. 5 முதல் 8 லட்சம் வரை ஊதியம் பெறுவோ ருக்கு 20 விழுக்காடும், 8 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோ ருக்கு 30 விழுக்காடும் வரி விதிக் கப்படுகிறது.
இது கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது:
ரூ.2 லட்சம் - ரூ.5 லட்சம் -10%
ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் -20%
ரூ.10 லட்சம் : 30%
மூத்த குடிமகன்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர இருக்கிறது.
இது தவிர வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு அதாவது ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு தொடர்ந்து நீடிக்கும். ஜிபிஎப், பிபிஎப், ஆர்பிஎப் ஆகியவற்றின் மீதான சலுகைகள் தொடர்ந்து நீடிக்கும்.இந்த முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. திங்களன்று இது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.

No comments:
Post a Comment