சென்னை, 14 ,செப்டம்பர் 2010 :
முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனமான ஜே.கே. டயர் இண்டஸ்ட்ரீஸ், தமிழகத்தில் தமிழ் நாட்டில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
'' தமிழ்நாட்டில் ரூ.930 கோடி முதலீட்டில் டயர் தொழிற்சாலையை அமைக்கப்படும். புதிய தொழிற் சாலை ஆண்டுக்கு 29 லட்சம் டயர்கலை உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்கும். புதிய தொழிற் சாலை கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் '' என்று ஜே.கே.டயர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரகுபதி சின்ஹானியா தெரிவித் திருக்கிறார்.
புதிய தொழிற் சாலை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலத்தை இந்நிறுவனம் ஏற்கனவே வாங்கிவிட்டது.
Tuesday, September 14, 2010
ஸ்பெக்ட்ரம் விவகாரம்- ஆ.ராசாவுக்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ்
சென்னை, 13 , 2010 :
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவிடம் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போல ஒரு நோட்டீஸ் மத்திய அரசு, சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகி யோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த விவகாரம் தொடர்பான சிபிஐ அமைப்பின் விசாரணையை கண் காணிக்க கோரி சி.பி.ஐ.எல். என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
