சென்னை, 13 , 2010 :
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவிடம் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போல ஒரு நோட்டீஸ் மத்திய அரசு, சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநரகம், வருமான வரித்துறை ஆகி யோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த விவகாரம் தொடர்பான சிபிஐ அமைப்பின் விசாரணையை கண் காணிக்க கோரி சி.பி.ஐ.எல். என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment