நியூயார்க் ,செப்டம்பர் 03 , 2010 :
ஜிமெயில் என்பது கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் இப்போது ' பிரியாரிட்டி இன்பாக்ஸ்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியில், மின்னஞ்சல் முகவரிதாரரின் மின்னஞ்சல் பெட்டி (இன்பாக்ஸ்) 3 பிரிவுகளாகப் பிரிவாக பிரிக்கப்படும் . முக்கிய மின்னஞ்சல்கள் 'இம்பார்ட்டன்ட் அண்ட் அன்ரெட்' என்ற பிரிவுக்குள் சென்று விடும். மற்ற மின்னஞ்சல்கள் மற்ற பகுதிகளுக்குள் சென்று உட்கார்ந்து கொள்ளும்.
யாரிடமிருந்து அதிக மின்னஞ்சல்கள் வருகின்றன என்ற அடிப்படையில் இந்த பிரித்தல் நடவடிக்கை இயங்குகிறது. மேலும் +பட்டன் அதிக முக்கியத்துவமான மின்னச்சல்களையும்,-பட்டன் மூலமாக குறைந்த முக்கியத்துவம் வாய்த்த மின்னச்சல்களையும் குறிப்பிட்டு வேறுபடுத்திக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment