ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தில் உள்நாட்டில் கார் விற்பனையில் 17 .2 விழுக்காடு உயர்வை சந்தித்தது. அதாவது 28 ,601 கார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 24 ,401 கார்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்றது. அதே நேரத்தில் கடந்த மாதம் 22 ,305 கார்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 12 .3 விழுக்காடு சரிவு ஆகும்.

இது குறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குனர் அர்விந்த் சக் சேனா கூறுகையில், ''ஹூண்டாய் கார் களுக்கான உள் நாட்டுத் தேவை தொடர்ந்து அதிகரிக்கும். மூலப் பொருட்கள் கிடைப்ப தில் சில சிரமங்கள் ஏற்பட்டதால் உற்பத்தி யில் சிறிதளவு தேக்கம் ஏற்பட்டது. எனவே எமது உற்பத்தி முறையில் சில மாற்றங் களை செய்ய இருக்கிறோம். எதிர்வரும் விழாக்காலத்தில் உள்நாட்டில் ஹூண்டாய் கார்களுக்கு நல்ல கிராக்கி ஏற்படும் என்று எதிர்பார்கிறோம்'' என்றார்.
No comments:
Post a Comment