இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலைகளில் ஒன் றான யோகா சனத்துக்கு இப்போது சோதனை வந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடு களில் உள்ள மக்கள் தங்கள் மன அழுத்தத் திலிருந்து விடுபடவும், உடலையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் யோகா கற்று வருகின்றனர். தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட இது தொடர் பான நூல்களை வாங்கி செல்வதை நீங்களே பார்த்திருக்க முடியும். இதை பணம் கொட்டும் தொழிலாகவும் சிலர் ஆகி விட்டார்கள். அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான யோகாசன பயிற்சி மையங் கள் செயல் பட்டு வருகின்றன. இதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. இப்போது நாங்கள்தான் யோகாசனத்தை கண்டு பிடித்தோம் என்று அவர்களில் சிலர் உரிமை கொண்டாடுவதுதான் கொடுமை. அண்மை யில் தென் கொரியா வில் யோகாசனத்தை தாம்தான் கண்டு பிடித்த தாகவும், அதற்கு காப்புரிமை வேண்டும் என்றும் சர்வதேச காப்புரிமை அமைப்பிடம் விண்ணப்பித்திருக் கிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு, யோகா கலையைப் பாதுகாக்கும் நோக் கத்துடன் ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதன்படி பல யோகா வல்லுனர்களி டம் பேசி, பல்வேறு யோகாசனங்களை செய்ய வைத்து, அவற்றை வீடியோ படங்களாக எடுத்து, பன்னாட்டு அறிவு சார் சொத்துரிமை அமைப்பிடம் வழங்கி இருக்கிறது. அவற்றின் மூலம் யோகாசன கலை இந்தியாவில் பன்னெடுங் காலமாக இருந்து வருகிறது என்பது மெய்ப்பிக் கப்படும். மேலும், யாரும் சொந்த சரக்கை யோகாசனத்தில் கலந்து அடித்து கல்லா கட்டுவதுடன், காப் புரிமை கோருவதற்கும் தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு , வேப்ப மரத்தின் மருத்துவ குணங்களை தாங்கள் தான் கண்டு பிடித்ததாக அமெரிக்கா காப்புரிமை பெற்றதும், அதை எதிர்த்து போராடி இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வார் வேம்பை நமக்கு மீட்டு தந் ததும் நினைவு கூரத்தக்கது.
| Provided by website-hit-counters.com site. |
No comments:
Post a Comment