8 .8 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது இந்தியப் பொருளாதாரம்
புது டில்லி, ஆகஸ்ட் 31 , 2010 :
 |
| மாண்டேக் சிங் அலுவாலியா |
உற்பத்தி துறையின் வளர்ச்சியை அடுத்து இந்தியப் பொருளாதாரம் கடந்த 3 மாதங்களில் 8 .8 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது. வேளாண்மை துறை, 2 .8 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உற்பத்தி துறை, 12 .4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய ஆண்டில் (இதே காலாண்டில்) இது வெறும் 3 .8 விழுக்காடு உயர்வாகத் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கட்டுமானத் துறையும் 7 .5 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. வங்கி, நிதி, காப்பீடு சேவை துறைகள் 8 விழுக்காடு அளவுக்கு வளர்ந்துள்ளன. இந்த ஆண்டில் (2010 -11 ) நாட்டின் பொருளாதாரம் 8 .5 அளவுக்கு உயரும் என்று மத்திய அரசு எதிர்பார்கிறது. இதனையே திட்டக் குழுவின் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment