சென்னை, ஆகஸ்ட் 19: ஊரகப் பகுதிகளில் புறங்களில் பி.பீ.ஓ. நிறுவனங்களை தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு மானியம் அளிக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமப்புற பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கான தனி கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
குறைந்த பட்சம் 100 ஊழியர்களுடன் 3 ஆண்டுகள் செயல்பட்டு வரும் . நிறுவனங்களுக்கு 15 விழுக்காடு வரை மானியம் தரப்படும். அதேபோல, 100 பேருக்கு 3 மாத பி.பீ.ஓ.பயிற்சியும், பின்னர் 9 மாதங்கள் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு மாதந்திர உதவி தொகையும் உண்டு.
Thursday, August 19, 2010
வட்டி வீதம் உயர்ந்தது. வீட்டுக்கடன்கள் வட்டியும் உயரும்.
மும்பை, ஆகஸ்ட் 17 :
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உட்பட பல வங்கி கள் தங்களது வட்டி விகி தங்களை மாற்றி உள்ளன. அதன்படி நுகர்வோர் கடன் கள், வீட்டுக்கடன்கள் ஆகியவற்றுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்க இருக்கின்றன. அதேபோல வைப்புகளுக்கான வட்டி வீதமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்த கடன் கொள்கையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதகாக வங்கிகளுக்கான ரெப்போ , ரிவர்ஸ் ரெப்போ விகிதங் களை மாற்றியமைத்து. இதனை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா , பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்ற முன்னணி வங்கிகள் தங்களது கடன் வட்டி வீதங்களை உயர்த்தி இருக்கின் றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடனுக்கான வட்டி வீதத்தை அரை விழுக்காடு அதி கரித்திருக்கிறது.
புதிய வட்டிவீதம் நடைமுறைக்கு வருவதால் சொந்த வீட்டு கனவில் இருப் போருக்கு இது கொஞ்சம் கூடுதல் சுமையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
சமூக தொழில் கல்லூரி-டிவிஎஸ் தொடக்கம்
சென்னை, ஆகஸ்ட் 17, 2010:
டிவிஎஸ் கல்வி சமூகம் (டிவிஎஸ்இஎஸ்), 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இப்போது மிகச் சிறந்த பள்ளிக்கூடம், பாலிடெக்னிக், கிராமப்புற பயிற்சி வகுப்புகளை தமிழகம், கர்நாடக மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இப்போது டிவிஎஸ்இஎஸ் அமைப்பானது டிவிஎஸ் தொழில் கல்லூரியை (டிவிஎஸ்-விசி) மிகப்பெரிய அளவில் வானகரத்தில் உள்ள டிஎஸ் ஸ்ரீனிவாசன் பாலிடெக்னிக் மற்றும் உயர் பயிற்சி மையத்தில் அமைத்துள்ளது.
டிவிஎஸ்-விசி மையமானது முறையான கல்வியை பெறாதவர்களுக்கும் உதவும். டிவிஎஸ்-விசி கல்வித் திட்டமானது குறிப்பிட்ட துறையில் திறன் மிக்கவர்களை உருவாக்குவதாகும். தொழில் திறன் பெற்றவர்களுக்கு சான்று அளித்து உருவாக்குவதன் மூலம் அவர்களது பொருளாதார நிலை உயரும். மேலும் சமூகத்தில் அந்தஸ்தும் கிடைக்கும்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 85% பேருக்கு இக்கல்லூரியில் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெற விரும்புவோருக்கு அத்துறையில் பயிற்சி பெறுவதற்கான வசதியையும் டிவிஎஸ்-விசி அளிக்கிறது. இத்தகைய பயிற்சி அளிப்பதற்காக இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
“திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு பயிற்சித் திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பல லட்சக் கணக்கான இளைஞர்களில் வெகு சிலரே சிறந்த வேலையைப் பெறுகின்றனர். கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் நான்கில் ஒருவர்தான் வேலைக்கான திறமையுடன் திகழ்கின்றனர். இதனால்தான் மாணவர்களை தொழில் நிறுவனங்கள் முதல் நாளிலிருந்தே தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றன. மேலும் அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்தால், திறமையை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் இதுபோன்ற திறன் மேம்பாட்டுபயிற்சிகள் இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு மிகுந்த உதவியாக இருப்பதோடு, இதுபோன்ற தகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் வேலை பெறுவதற்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது,” என்று டிவிஎஸ்எஸ்இஎஸ் இயக்குநர் டாக்டர் மாலினி ஸ்ரீனிவாசன் கூறினார்.
“இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் தொழில் கல்வியைப் பெறுவதற்கு எந்த ஒரு தொழில் கல்லூரியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு இந்திரா காந்திதேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம் ஆர்வமாக உள்ளது. டிவிஎஸ்இஸ் மையம், தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்த்தமுள்ள ஒப்பந்தமாக டிவிஎஸ் தொழில் கல்லூரியுடனான ஒப்பந்தம் அமையும்,” என்று இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் கே. பன்னீர்செல்வம் கூறினார்
தொழில்நுட்ப பயிற்சி படிப்பு
1. இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் சான்றிதழ்
2. சிஎன்சி புரோகிராமிங் & மெஷினிங்கில் சான்றிதழ்
3. பிஎல்சி புரோகிராம் சான்றிதழ்
4. “கேட்” சான்றிதழ்
5. டூல் வடிவமைப்பு சான்றிதழ்
6. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸில் சான்றிதழ்
7. ஃபிட்டிங் சான்றிதழ்
8. மெஷினிங் சான்றிதழ்
9. வெல்டிங் சான்றிதழ்
10. வீடுகளுக்கான குழாய் அமைப்பு சான்றிதழ்
11. வீடுகளுக்கான மின்சார வயர் அமைப்பது
12. செல்போன் ரிப்பேரில் பட்டயபடிப்பு
தொழில்நுட்பம் சாராத படிப்பு
1. காப்பீடு குறித்த சான்றிதழ்
2. சில்லரை வணிக சான்றிதழ்
3. நிதி & கணக்கியல் பட்டய படிப்பு
4. ஹோட்டல் உள்ளிட்ட உபசரிப்புத்துறை சான்றிதழ் படிப்பு
டிவிஎஸ்-விசி பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில் நுட்பம் அல்லாத திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கிறது. இதில் 6 மாத சான்றிதழ் படிப்பு முதல் ஓராண்டு பட்டயப படிப்பு வரை அடங்கும். இந்த படிப்புகளில் சேர கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தொழிலில் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். இதில் சேர்வதற்கு வயது வரம்பு கிடையாது. பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்தியவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு. இதன் மூலம் அவர்கள் தங்களது திறமையை மேம்படுத்திக் கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேற முடியும்.
டிவிஎஸ்-விசி, இதுபோன்று மேலும் மூன்று மையங்களை அமைத்து விரிவு படுத்தத் திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் தென் மாநிலங்களில் அமையும். அத்துடன் தொழில்துறை பயிற்சித் திட்டங்களை நாடு முழுவதும் கற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளை பல்வேறு தொழில் கல்லூரிகளுடன் செய்து கொண்டு மேலும் பல பயிற்சி வகுப்புகளைத் தொடங்கத் திட்ட மிட்டுள்ளது.
ரூபாய் குறியீட்டுடன் விசைப்பலகை: டி.வி.எஸ்.அறிமுகம்
சென்னை, 17 ஆகஸ்ட்:
தமிழகத்தின் முன்னணி கணிப்பொறி உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான டி.வி. எஸ். எலெக்ட்ரானிக்ஸ், நாட்டிலேயே முதன் முறையாக ரூபாய் சின்னத்தைக் கொண்ட கணிப்பொறி விசைப்பலகையை அறிமுகம் செய்திருக்கிறது. 490மிமீ நீளம், 180மிமீ அகலம் 20மிமீ உயரம் கொண்ட இந்த விசைப்பலகை விண் டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்கு மென்பொருள் உள்ள அனைத்து கணிப் பொறிகளிலும் எளிதாக இயங்கும். இதன் விலை ரூ. 1495 தான்.
டாலர், ஈரோ பணத்தைப் போல உருவாகப்பட்டுள்ள இந்த புதிய ரூபாய் குறியீட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் எழுத்துருவை மங்க ளூரை சேர்ந்த போரடியான் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ` குறியீட்டை தட்டச்சு செய்ய விரும்புவோர், http://blog.foradian.com/rupee-font-version-30 என்ற இணைய தளத்திற்கு சென்று இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தின் முன்னணி கணிப்பொறி உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான டி.வி. எஸ். எலெக்ட்ரானிக்ஸ், நாட்டிலேயே முதன் முறையாக ரூபாய் சின்னத்தைக் கொண்ட கணிப்பொறி விசைப்பலகையை அறிமுகம் செய்திருக்கிறது. 490மிமீ நீளம், 180மிமீ அகலம் 20மிமீ உயரம் கொண்ட இந்த விசைப்பலகை விண் டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்கு மென்பொருள் உள்ள அனைத்து கணிப் பொறிகளிலும் எளிதாக இயங்கும். இதன் விலை ரூ. 1495 தான்.
டாலர், ஈரோ பணத்தைப் போல உருவாகப்பட்டுள்ள இந்த புதிய ரூபாய் குறியீட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் எழுத்துருவை மங்க ளூரை சேர்ந்த போரடியான் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. ` குறியீட்டை தட்டச்சு செய்ய விரும்புவோர், http://blog.foradian.com/rupee-font-version-30 என்ற இணைய தளத்திற்கு சென்று இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Subscribe to:
Comments (Atom)



