பங்குச் சந்தையில் இன்று நமது பங்குகளின் மதிப்பு ஏறி இருக்கிறதா, இறங்கி இருக் கிறதா? கையில் இருக்கும் பங்குகளை விற்று விடலாமா, வைத்திருக்கலாமா, எவ் வெவற்றை வாங்கலாம் என்பதெல்லாம் ஒவ்வொரு முதலீட்டாளரின் தினசரி யோசனை யாக இருக்கும். ஆனால் பங்கு சந்தை நிலவரம் தெரிய வேண்டுமானால் நீங்கள் இணைய தளத்தையோ, உங்கள் செல் பேசியில் பங்கு சந்தை நிலவரம் தரும் வசதியையோ வேண் டும். அல்லது தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கு இது சாத்தியம் இல்லாததாக இருக்கி றது. இவர்களைப் போன்றவர்களுக்காக மும்பை போன்ற பெரு நகரங்களில் எல்லோரும் பார்க்கும் இடங்களில் பங்கு சந்தை விபரங்கள் தெரியும் வகையில் செய்திருப்பார்கள். இப்போது அந்த கலாச்சாரம் தமிழகத்திலும் வந்துவிட்டது.சென்னையின் முக்கிய மையமான அண்ணா சாலையில் (ஜெமினி சந்திப்பு) உள்ள சிக்னலில் அமைந்துள்ள ஐ.எப்.சி.ஐ. நிறுவனம், இந்த வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் சற்றே மேல் நோக்கி பார்த்தல் போதும். அந்நிறுவன வெளி சுவற்றில் பங்குகளின் விபரங்கள் தோன்றிக் கொண்டிருக்கும். இபோது பலரும் இதனை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனை அடுத்து அண்ணா சாலையிலும் ஒரு நிறுவனம் பங்கு சந்தை நிலவரங்களை electronic முறையில் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறது.

No comments:
Post a Comment