சென்னை, ஆகஸ்டு 19, 2010: டெக்ஸோனிக் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனம், இன்று புது வகையான மல்டிமீடியா ப்ளக் அண்ட் ப்ளே சாதனமான IRadioPOP-I -ஐ இந்தியாவில் முதன்முதலாக அறிமுகம் செய்கிறது. இதன் வரவினால், உலகம் முழுவதுமுள்ள 20000 இணைய வழி வானொலி நிலையங்கள் மற்றும் 5000 இணையவழி தொலைக்காட்சி அலைவரிசைகளை கேட்டும் கண்டும் மகிழலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய வானொலி நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் நாடு, வகை மற்றும் மொழிவாரியாக வகைப்பிரிக்கப்படுகின்றன. இந்த சாதனத்தை ஏதேனும் தனிநபர் கணினி அல்லது மடிக்கணினியில் இணையத்தில் இணைக்கப்பட்டவுடன், உங்களுக்கு விருப்பமான வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளை மெனுப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
“இச்சாதனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்கு நாங்கள் நாட்டில் முன்னணியிலுள்ள சில சில்லறை வணிகர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுடன் கைகோர்க்க உள்ளோம். வாடிக்கையாளர்கள் தங்க ளுக்கு விருப்பமான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் வானொலி நிலையங் களையும் தங்கள் வசதிக்கேற்ப, பயணம் செய்துகொண்டிருக்கும் வேளை யிலும் கூட, கண்டும் கேட்டும் மகிழ முடியும். தற்சமயம் இந்த சாதனம் சென்னை, பெங்களூரு , ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது", என்று டெக்ஸோனிக் இன்ஸ்ட்ரு மெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் நிதேஷ் பண்டாரி கூறுகிறார்.
“இந்தியாவைப் போன்று மிக வேகமான விரிவடைந்து வரும் இணையச் சந்தை ஒன்றில், இணையத்தைப் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு மேலும் அதிகரித்து வருகிறது உத்தேச மதிப்பீட்டின்படி, இந்தியாவில் தோராயமாக 81 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்து கின்றனர். இச்சாதனத்தை செருகிய உடனேயே, இதில் கொடுக்கப்பட்டுள்ள மெனுப் பட்டியலில் இருந்து உடனடியாக நிரல் களை தேர்வு செய்துகொள்ள முடியும். இதற்கு பதிவு அல்லது கடவுச் சொல்லோ அல்லது எந்த வகையான மாதாந்திர கட்டணங்களோ தேவைப்படாது. ” என்றும் திரு. நிதேஷ் பண்டாரி அவர்கள் கூறுகிறார்.

No comments:
Post a Comment