சென்னை, ஆகஸ்ட், 21:
நாட்டிலேயே அதிக அளவாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கிய நிறுவனம் என்ற பெயரை டாடா கன்சல்டன்சி (டிசிஎஸ்) நிறுவனம் பெற்றிருக்கிறது. அந்நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 63 ஆயிரத்து 700 பணியாளர்கள் பனி புரிவது கண்டறியப்பட்டுள்ளது.
அதிக பேருக்கு வேலை வைப்பு கொடுத்த விசயத்தில் இரண்டாவது இடத்தில் ஐ.பி.எம். நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். சர்வதேச அளவில் ஐபிஎம் நிறுவன அலுவலகங்களில் பணி புரிவோரின் எண்ணிக்கை 4 லட்ச மாகும். இன்போசிஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 14ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.
புதிய ஊழியர்களை பணியமர்த்துவதில் ஐபிஎம்தான் முன்னணியில் உள்ளது. தனது அலுவலக பரப்பளவையும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 10 லட்சம் சதுர அடிக்கு அலுவலகத்தை விஸ்தரித்துள்ள ஐபிஎம், 3 ஆண்டுகளில், புனே, பெங்க ளூரு ஹைதராபாத் நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment